மதுரை: மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் தாமதமான சிகிச்சை மற்றும் ஒழுகும் அறை போன்ற பிரச்னைகளால் அவதி அடைந்துள்ளனர்.
மதுரை திருமால்புரம் கார்த்திக். இவரது உறவினர் ராமலிங்கத்தை தீவிர விபத்து பிரிவில் அனுமதித்த நிலையில் மாவு கட்டு போடும் ஊழியர் பாண்டி, நீண்ட நேரம் வராமல் காக்க வைத்ததாக புகார் தெரிவித்தார்.
அவர் கூறுகையில், ''மகப்பேறு வார்டு முதல் அனைத்து வார்டுகளிலும் ஊழியர்கள் லஞ்சம் வாங்கி கொண்டு வேலை செய்கின்றனர். இது குறித்து டீன் ரத்தினவேலிடம் புகார் தெரிவித்துள்ளேன்'' என்றார்.
ஊமச்சிகுளம் சண்முகசுந்தரம் என்பவரும் புகார் கூறியுள்ளார்.அவர் கூறுகையில், எனக்கு மயக்கம் வந்ததால் அண்ணா பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள 99வது வார்டில் அனுமதித்து குளுகோஸ் ஏற்றினர். அடுத்து பழைய மருத்துவமனையின் 221வது வார்டிற்கு மாற்றினர். அங்கு படுக்கை மீது மழைநீர் ஒழுகியதால் புகார் தெரிவித்தேன். ஒரு மணி நேரத்தில் என்னை 'டிஸ்சார்ஜ்' செய்து அனுப்பி விட்டனர்'' என்றார்.