கத்திப்பாரா நகர்ப்புற சதுக்கம் 9ம் தேதி திறப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 டிச
2021
03:11



கிண்டி, கத்திப்பாரா மேம்பாலம் கீழ் பகுதியில், 14.50 கோடி ரூபாயில் அமைக்கப்பட்டுள்ள கத்திப்பாரா நகர்ப்புற சதுக்கம் 9ம் தேதி திறந்து வைக்கப்படுகிறது.கிண்டி, கத்திப்பாராவில், 260 கோடி ரூபாயில் கட்டப்பட்ட மேம்பாலம், 2008ம் ஆண்டு திறக்கப்பட்டது.


ஜி.எஸ்.டி., சாலை, பூந்தமல்லி சாலை, அண்ணா சாலை மற்றும் கோயம்பேடு சாலையை இணைக்கும் வகையில், இந்த மேம்பாலம் உள்ளது.இதன் அருகில், ஆலந்துார் மெட்ரோ ரயில் நிலையம் உள்ளது. கத்திப்பாரா மேம்பாலத்தின் கீழ் பகுதியில், 5.38 லட்சம் சதுர அடி பரப்பளவு இடம் உள்ளது.இந்த இடத்தை மேம்படுத்த மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவு செய்தது.

இதற்காக, 14.50 கோடி ரூபாயில், 'கத்திப்பாரா நகர்ப்புற சதுக்கம்' அமைக்கும் பணி, 2018ம் ஆண்டு துவங்கியது. ஈரோடைச் சேர்ந்த, சரஸ்வதி என்ற கட்டுமான நிறுவனம் பணி செய்கிறது. 4 பிரிவாக பணி நடக்கிறது. கொரோனா பாதிப்பால், பணி மந்தமாக நடந்தது.தற்போது பணி முடியும் தருவாயில் உள்ள நிலையில், கத்திப்பாரா நகர்ப்புற சதுக்கத்தை, 9ம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.பஸ் நிறுத்தம், வணிக வளாகம், சிறுவர் பூங்கா, உணவு மையம் போன்ற வசதிகளுடன், கத்திப்பாரா நகர்ப்புற சதுக்கம் அமைந்துள்ளது.25 பஸ்களை நிறுத்தலாம்!கத்திப்பாரா சதுக்கத்தில், ஒரே நேரத்தில், 25 பஸ்கள் நிறுத்தும் வகையில் நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது, ஆலந்துார் மெட்ரோ ரயில் நிலையத்தை இணைக்கும் வகையில், மினி பஸ் இயக்கப்பட உள்ளது. அடுத்தகட்டமாக, மாநகர பஸ்கள் இந்த நிறுத்தத்தில் நின்று செல்ல உள்ளது. ஜி.எஸ்.டி., சாலை, பூந்தமல்லி சாலை, அண்ணா சாலையில் இருந்து, இதர பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் இங்கு நின்று செல்ல உள்ளது. முன்பு, ஜி.எஸ்.டி., சாலை, கோயம்பேடு சாலையில் இருந்து வரும் கனரக வாகனங்கள், கீழ் பகுதியில், யூ டர்ன் செய்ய முடியாது. தற்போது அதற்கு வசதி செய்யப்பட்டு உள்ளது.மழை நீர் தேங்காது!மேம்பாலத்திற்கு கீழ் பகுதியில் இரண்டு சுரங்கப்பாதைகள் உள்ளன. ஒன்று பயன்பாடு இல்லாமலும், மற்றொன்று, இலகுரக வாகனங்கள் செல்லும் வகையிலும் இருந்தன. மழை நேரத்தில் இதை பயன்படுத்த முடியாது. தற்போது, இரண்டு சுரங்கப்பாதைகளையும் மேம்படுத்தி, மழைநீர் தேங்காமல் கட்டமைக்கப்பட்டு உள்ளது. இலகுரக வாகனங்கள், பாதசாரிகள் செல்ல முடியும். இந்த சதுக்கத்தில் நடைபயிற்சி செய்ய தனி பாதை உள்ளது. மொத்தம், 3 கி.மீ., நீளத்தில், 6 அடி அகலத்தில் நடைபயிற்சி பாதை அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஆங்காங்கே தமிழ் எழுத்து கொண்ட அலங்கார விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மேம்பால துாண்களில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. புல் தரையை சுற்றி அலங்கார விளக்குகள், மைய பகுதியில் சிமென்ட் இருக்கை அமைக்கப்பட்டு உள்ளது ஒரே நேரத்தில், 50 கார்கள், 100 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் இரண்டு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மூன்று இடங்களில் ஆண், பெண், மாற்றுத்திறனாளிகள் என, தனித்தனி நவீன கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன;

காவல் கட்டுப்பாட்டு அறையும் உள்ளது மொத்தம் 56 கடைகள் கட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு கடைகளும், 200 முதல் 400 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளன. இதில், 18 கடைகள், உணவு விற்பனைக்காக ஒதுக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள், சாப்பிட வசதியாக திறந்தவெளி இருக்கை வசதி உள்ளது மைய பகுதியில், 3,000 அடி நீளத்தில், மருதாணி செடி வளர்க்கப்பட்டு உள்ளது. சதுக்கம் முழுதும், 27 வகையான, 7,069 செடிகள் நடப்பட்டுள்ளன.


- -நமது நிருபர்- -

 

Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X