சென்னை : தொழில் முனைவோர் மேம்பாடு தொடர்பான 15 நாட்கள் பயிற்சி, சென்னையில் நடைபெறுகிறது.தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் வெளியிட்ட செய்தி குறிப்பு:தொழில் முனைவோர் மேம்பாடு பயிற்சி, வரும் 7 முதல் 23ம் தேதி வரை சென்னையில் நடைபெறுகிறது.
சொந்தமாக தொழில் துவங்குவதில் உள்ள நன்மைகள், தொழில் வாய்ப்புகள், தொழிலை தேர்வு செய்வது எப்படி, திட்ட அறிக்கை தயாரித்தல், தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி ஆகியவை இந்த பயிற்சியில் வழங்கப்படும்.நிதி உதவிகள் தொடர்பான ஆலோசனையும் வழங்கப்படும். சுயமாக தொழில் துவங்க விரும்பும், 18 வயதுக்கு மேற்பட்டோர் இந்த பயிற்சியில் சேரலாம்.தொழில் துவங்க இருக்கும் தொழில் முனைவோருக்கு, அரசு மற்றும் பிற நிறுவனங்கள் வழங்கும் உதவிகள் மற்றும் திட்டங்கள் குறித்தும் இந்த பயிற்சியில் விளக்கப்படும். மேலும் விபரங்களை 94445 56099, 94445 57654 ஆகிய மொபைல் போன் எண்களிலும், 044 - 2225 2081, 2225 2082 ஆகிய தொலைபேசி எண்களிலும் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.