எல்.ஐ.சி., ஊழியர்கள் பள்ளிக்கு உதவிக்கரம் | சென்னை செய்திகள் | Dinamalar
எல்.ஐ.சி., ஊழியர்கள் பள்ளிக்கு உதவிக்கரம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

05 டிச
2021
03:19

திருவொற்றியூர் : மாநகராட்சி பள்ளிக்கு 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் வழங்கி, எல்.ஐ.சி., ஊழியர்கள் உதவியுள்ளனர்.திருவொற்றியூர், ராமநாதபுரம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில், 500க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படிக்கின்றனர்.



இப்பள்ளிக்கு, எல்.ஐ.சி., காப்பீட்டு கழக ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த மகளிர் குழுவினர் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை வழங்கினர்.இதற்கான விழா, நேற்று பள்ளி வளாகத்தில் நடந்தது. இதில், எல்.ஐ.சி., மகளிர் குழுவினர், மேஜை, நாற்காலி, கரும்பலகை, மடிக்கணினி, குடிநீர் குடுவை, சானிடைசர் மிஷின் உள்ளிட்ட பல பொருட்களை, பள்ளி தலைமை ஆசிரியை முத்துச்செல்வி மற்றும் மாணவ - மாணவியரிடம் வழங்கினர். இந்நிகழ்ச்சியில், மாணவ - மாணவியரின் பேச்சு போட்டியும் நடந்தது.

 

Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X