செய்யூர், : செய்யூர் அருகே, அடகு கடையின் ஜன்னலை உடைத்து, 5 கிலோ தங்க நகைகள், 35 கிலோ வெள்ளி பொருட்களை திருடிச் சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரைச் சேர்ந்தவர் சர்மா, 48. இவர், பஜார் வீதியில் அடகு மற்றும் நகை கடை நடத்தி வருகிறார்.நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு கடையை மூடி, வீட்டிற்கு சென்றார். வழக்கம்போல், நேற்று காலை வந்து கடையை திறந்தபோது, பின்பக்க ஜன்னல் கம்பிகள் உடைக்கப்பட்டிருந்தன.கடையில் இருந்த 35 கிலோ வெள்ளி பொருட்கள், 5 கிலோ தங்க நகைகள் மற்றும் 15 ஆயிரம் ரூபாய் திருடு போனது தெரிய வந்தது. லாக்கரை உடைக்க முடியாததால், 500 சவரன் தங்க நகை தப்பி உள்ளது.இது குறித்து, செய்யூர் போலீசார் விசாரிக்கின்றனர்.