மூவரை வெட்டிய தந்தை, மகன்கள் கைது
அம்பத்துார்: கொரட்டூர், கங்கையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரவுடி அரவிந்தன், 24. இவர், 2018ல் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக, திருமுல்லைவாயலைச் சேர்ந்த ஆகாஷ், 25, கொரட்டூரைச் சேர்ந்த பிரசாந்த், 26, அவரது சகோதரர் மணி, 24, ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மூவரும் நேற்று முன்தினம் பாடி, மீன் மார்க்கெட்டில் நின்றனர்.
அப்போது, அரவிந்தனின் தந்தை ரவி, 60, மகனின் கொலைக்கு பழிதீர்க்க இரு மகன்களுடன் சேர்ந்து, அவர்களை ஓட ஓட விரட்டி வெட்டினார். படுகாயமடைந்த ஆகாஷ், பிரசாந்த், மணி ஆகியோர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விசாரித்த கொரட்டூர் போலீசார், ரவி மற்றும் அவரது இரு மகன்களை நேற்று கைது செய்தனர்.
கஞ்சா கடத்தியோருக்கு 'காப்பு'
திருமங்கலம்: பாடிகுப்பம் பகுதிகளில், திருமங்கலம் போலீசார் நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, டூ - வீலரில் வந்த இருவரை பிடித்து விசாரித்தனர். அவர்கள், திருமங்கலம், சத்ய சாய் நகரைச் சேர்ந்த சுரேஷ், 30, தேவநாதன், 20, என்பதும், பெரியபாளையத்தில் இருந்து கஞ்சா கடத்தி வந்ததும் தெரியவந்தது.
மொத்தம், 1.2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் கைது செய்தனர்.24 பேருக்கு 'குண்டாஸ்'சென்னை: வானகரத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார், 46. டி.பி., சத்திரத்தைச் சேர்ந்தவர் அசோக்குமார், 22. திரு.வி.க., நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன், 27. இவர்கள் உள்ளிட்ட 24 பேர், கொலை, கொள்ளை, நிலமோசடி, வங்கி மோசடி, கஞ்சா விற்பனை போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தனர். போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவுப்படி, 24 பேரையும் போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர்.
இந்தாண்டில் இதுவரை, 381 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.பெண்ணிடம் அத்துமீறிய வாலிபர் கைதுகண்ணகி நகர்: கண்ணகி நகர், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு குடியிருப்பைச் சேர்ந்த 32 வயது பெண், நேற்று முன்தினம், வீட்டின் பின் பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார், 25, என்பவர், பெண்ணிடம் ஆபாசமாக பேசி உள்ளார். திடீரென அவரது உடைகளை கழற்றி, ஆபாசமாக நின்று செய்கை காட்டி உள்ளார். இது குறித்து விசாரித்த கண்ணகி நகர் போலீசார், சதீஷ்குமாரை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.வாலிபர் தற்கொலைதுரைப்பாக்கம்: பெருங்குடி, சோமசுந்தரம் தெருவைச் சேர்ந்தவர் வைரவமூர்த்தி, 26; பி.இ., பட்டதாரி. இவரது மனைவி சுமித்ரா, 23. திருமணமாகி 10 மாதங்களாகின்றன. வைரவமூர்த்தி தனியார் நிறுவனத்தில் பணி புரிந்துள்ளார். திருமணத்திற்கு பின், வேறு வேலை தேடி வந்தார். எதிர்பார்த்த வேலை கிடைக்காததால், குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. மன அழுத்தத்தில் இருந்தவர், நேற்று முன்தினம், மனைவியை அவரது சகோதரி வீட்டில் கொண்டு விட்டார். பின், தன் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். துரைப்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.தண்டவாளத்தில் வாலிபர் உடல் மீட்புதிருவொற்றியூர்: திருவொற்றியூர், அம்பேத்கர் நகர் அருகே ரயில் தண்டவாளத்தில் 30 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் கிடப்பதாக, கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசாருக்கு, நேற்று காலை தகவல் கிடைத்தது. போலீசார், வாலிபர் உடலை மீட்டு, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர். இதில், உயிரிழந்த நபர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அஜித் முர்மூ, 33, என்பது தெரியவந்தது. ரயிலில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தாரா அல்லது கொலையா என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.இளம்பெண் தற்கொலைதாம்பரம்: துாத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சேர்மக்கனி, 19. தாம்பரத்தை அடுத்த சிட்லப்பாக்கத்தில், தோழியருடன் தங்கி, அங்குள்ள எலக்ட்ரிக்கல் கடையில் விற்பனையாளராக பணிபுரிகிறார். நேற்று முன்தினம் காலை, வழக்கம்போல் அனைவரும் பணிக்கு சென்றனர். சேர்மக்கனி மட்டும் வேலைக்கு செல்லவில்லை. மதியம் வந்து பார்த்தபோது, அவர் துாக்கிட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. போலீசார் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். தற்கொலைக்கான காரணம் குறித்து சிட்லப்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.மூவரை வெட்டிய தந்தை, மகன்கள் கைது
அம்பத்துார்: கொரட்டூர், கங்கையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரவுடி அரவிந்தன், 24. இவர், 2018ல் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக, திருமுல்லைவாயலைச் சேர்ந்த ஆகாஷ், 25, கொரட்டூரைச் சேர்ந்த பிரசாந்த், 26, அவரது சகோதரர் மணி, 24, ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
மூவரும் நேற்று முன்தினம் பாடி, மீன் மார்க்கெட்டில் நின்றனர். அப்போது, அரவிந்தனின் தந்தை ரவி, 60, மகனின் கொலைக்கு பழிதீர்க்க இரு மகன்களுடன் சேர்ந்து, அவர்களை ஓட ஓட விரட்டி வெட்டினார். படுகாயமடைந்த ஆகாஷ், பிரசாந்த், மணி ஆகியோர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
விசாரித்த கொரட்டூர் போலீசார், ரவி மற்றும் அவரது இரு மகன்களை நேற்று கைது செய்தனர்.
பெண்ணிடம் அத்துமீறிய வாலிபர் கைது
கண்ணகி நகர்: கண்ணகி நகர், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு குடியிருப்பைச் சேர்ந்த 32 வயது பெண், நேற்று முன்தினம், வீட்டின் பின் பகுதியில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார், 25, என்பவர், பெண்ணிடம் ஆபாசமாக பேசி உள்ளார். திடீரென அவரது உடைகளை கழற்றி, ஆபாசமாக நின்று செய்கை காட்டி உள்ளார். இது குறித்து விசாரித்த கண்ணகி நகர் போலீசார், சதீஷ்குமாரை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இருவர் துாக்கிட்டு தற்கொலை
துரைப்பாக்கம்: பெருங்குடி, சோமசுந்தரம் தெருவைச் சேர்ந்தவர் வைரவமூர்த்தி, 26; பி.இ., பட்டதாரி. இவரது மனைவி சுமித்ரா, 23. திருமணமாகி 10 மாதங்களாகின்றன. வைரவமூர்த்தி தனியார் நிறுவனத்தில் பணி புரிந்துள்ளார். திருமணத்திற்கு பின், வேறு வேலை தேடி வந்தார். எதிர்பார்த்த வேலை கிடைக்காததால், குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டுள்ளது.
மன அழுத்தத்தில் இருந்தவர், நேற்று முன்தினம், மனைவியை அவரது சகோதரி வீட்டில் கொண்டு விட்டார். பின், தன் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். துரைப்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.
தாம்பரம்: துாத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சேர்மக்கனி, 19. தாம்பரத்தை அடுத்த சிட்லப்பாக்கத்தில், தோழியருடன் தங்கி, அங்குள்ள எலக்ட்ரிக்கல் கடையில் விற்பனையாளராக பணிபுரிகிறார். நேற்று முன்தினம் காலை, வழக்கம்போல் அனைவரும் பணிக்கு சென்றனர். சேர்மக்கனி மட்டும் வேலைக்கு செல்லவில்லை.
மதியம் வந்து பார்த்தபோது, அவர் துாக்கிட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. போலீசார் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். தற்கொலைக்கான காரணம் குறித்து சிட்லப்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.
தண்டவாளத்தில் வாலிபர் உடல் மீட்பு
திருவொற்றியூர்: திருவொற்றியூர், அம்பேத்கர் நகர் அருகே ரயில் தண்டவாளத்தில் 30 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் கிடப்பதாக, கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசாருக்கு, நேற்று காலை தகவல் கிடைத்தது. போலீசார், வாலிபர் உடலை மீட்டு, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர்.
இதில், உயிரிழந்த நபர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அஜித் முர்மூ, 33, என்பது தெரியவந்தது. ரயிலில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தாரா அல்லது கொலையா என போலீசார் விசாரிக்கின்றனர்.