சென்னை : சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த ஒன்பது போலீசாரின் குடும்பத்தினருக்கு, தலா, 3 லட்சம் ரூபாய் என, 27 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது.கொரோனாவால் பாதிக்கப்பட்ட போலீசார் பலர் குணமடைந்தனர்.
ஆனால், உதவி கமிஷனர் ஈஸ்வரன், எஸ்.ஐ.,க்கள் செல்வன், ஆனந்தன், இளங்கோவன், ரவி, ஜான் ரூபஸ், கருணாநிதி, தலைமை காவலர் கோபிநாத், விக்டர் பென்னட் ஆகிய ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர்.கொரோனா தடுப்பு முன்கள பணியின்போது உயிரிழந்த ஒன்பது பேரின் குடும்பத்தினருக்கு, தனியார் நிறுவனங்கள் நிதியுதவி அளித்துள்ளன.அந்த நிதியை, சென்னை போலீஸ் கமிஷனரகத்தில் நடந்த நிகழ்ச்சியில், உயிரிழந்த போலீசாரின் குடும்பத்தினருக்கு, தலா, 3 லட்சம் ரூபாய் என, 27 லட்சம் ரூபாயை, சென்னை கூடுதல் கமிஷனர் லோகநாதன் நேற்று வழங்கினார்.