எண்ணுார் : கடல் சீற்றத்தால், படகு உடைந்து விபத்துக்குள்ளானதில், நான்கு பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.எண்ணுார், தாழங்குப்பத்தைச் சேர்ந்தவர் பத்மநாபன். இவர் தனக்கு சொந்தமான பைபர் படகில், நேற்று முன்தினம் மாலை, அதே பகுதியைச் சேர்ந்த ரோஹித், ஹரிஷ், கோவிந்த் ஆகியோருடன் கடலுக்கு மீன்பிடிக்க சென்றார்.
இந்நிலையில், நேற்று காலை கரை திரும்பிய நிலையில், கடல் சீற்றம் காரணமாக, கரை ஏறுவதற்கு முன்பாக, பைபர் படகு துாக்கி வீசப்பட்டு, கற்களில் மோதி உடைந்தது. இதில், வலை மற்றும் பிடிபட்ட மீன்கள் கடலில் இழுத்துச் செல்லப்பட்டன.மூவர் நீந்தி கரை சேர்ந்த நிலையில், ரோஹித் மட்டும் உடைந்த பைபர் படகை பிடித்தவாறு, தத்தளித்துக் கொண்டிருந்தார். கரை திரும்பிய மூன்று மீனவர்களும் வேறு படகில் சென்று, ரோஹித்தை மீட்டனர்.