சென்னை : தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு சார்பில், 10ம் தேதி குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் சார்பில், தொழிலாளர்களின் நீண்டகால நிலுவை குறைபாடுகளுக்கு விரைந்து தீர்வு காண்பதற்காக, குறைதீர் கூட்டம் நடக்கிறது.
சென்னையில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் மண்டல அலுவலகத்தில், ஒவ்வொரு மாதமும் 10ம் தேதி 'உங்கள் அருகில் பி.எப்.,' என்ற பெயரில் குறைதீர் கூட்டம் நடக்கிறது.அதன்படி, சென்னை வடக்கு மண்டல அலுவலகத்தில், இம்மாதம் 10ம் தேதி குறைதீர் கூட்டம் நடக்கிறது.குறைதீர் கூட்டத்தை பயன்படுத்தி, தொழிலாளர்கள் தங்கள் பிரச்னைக்கு தீர்வு காணலாம் என, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அறிவித்துள்ளது.