கொடுங்கையூர் : கொடுங்கையூர், எருக்கஞ்சேரியைச் சேர்ந்தவர் கிருத்திகா, 24. இவர், கடந்த 2ம் தேதி, எருக்கஞ்சேரியில் உள்ள பெரியம்மா வீட்டிற்கு வந்துள்ளார்.பின், எருக்கஞ்சேரி, எத்திராஜ் சாலையில் உள்ள தனியார் ஏ.டி.எம்.,மில் பணம் எடுக்க சென்றபோது, இரு சக்கர வாகனத்தில், 'ஹெல்மெட்' அணிந்து வந்த இருவர், கிருத்திகாவின், செயினை பறிக்க முயன்றனர்.
கிருத்திகா செயினை இறுக்கமாக பிடித்ததால், வழிப்பறி திருடர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இதில், கொடுங்கையூர், தென்றல் நகரைச் சேர்ந்த சதீஷ், 22, என்பவர் சிக்கிக் கொண்டார். அவரை, கொடுங்கையூர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் தப்பியோடிய மற்றொருவனை தேடிய நிலையில், நேற்று காலை, வழிப்பறியில் தொடர்புடைய ரவீந்திரன், 19, என்பவர் கைது செய்யப்பட்டார்.