சென்னை : ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் ஒன்றான துபாய் நகரில் இருந்து, நேற்று முன்தினம் இரவு, 'இண்டிகோ ஏர்லைன்ஸ்' விமானம் சென்னை வந்தது.
அதில் வந்த இரு பயணியரிடம், சாம்பிராணி துகள்களில் மறைத்து வைத்திருந்த 23.88 லட்சம் ரூபாய் மதிப்பிலான 601 கிராம் தங்கம் 17.90 லட்ச ரூபாய் மதிப்பிலான எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
நேற்று காலை, 'பிளை துபாய்' விமானம் மூலம் துபாய் செல்லவிருந்த, பெங்களூரு பயணியர் இருவரிடம் சோதனை இடப்பட்டது.இதில், 500 மதிப்பிலான 220 சவுதி ரியால்கள் 21.34 லட்ச ரூபாய் மதிப்பில் பறிமுதல் செய்யப்பட்டது.