திருக்கழுக்குன்றம் : நெரும்பூர், அணைக்கட்டு பகுதிகளில், கரும்பு தோட்டத்தை, வெள்ளம் சூழ்ந்துள்ளது.திருக்கழுக்குன்றம் அடுத்த நெரும்பூர் சுற்றுப்புற பகுதிகள், கூவத்துார் அடுத்த, அணைக்கட்டு உள்ளிட்ட பகுதிகள், கரும்பு விளைவிக்கப்படும் பகுதிகளாக உள்ளன.விவசாயிகள், வங்கி கடன் பெற்று, கரும்பு பயிரிட்டு, மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை அரவைக்கு வழங்குவர்.கடந்த ஜனவரியில் 50 ஏக்கர் பரப்பிற்கும் மேல், அவர்கள் கரும்பு பயிரிட்டனர்.