சில வரி செய்திகள் | சென்னை செய்திகள் | Dinamalar
சில வரி செய்திகள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

05 டிச
2021
03:57

குழந்தைகள் பாதுகாப்புக்கு பயிற்சி



திருப்போரூர்: திருப்போரூர் அடுத்த தண்டலத்தில் குழந்தை பாதுகாப்பு, உரிமைகள் குறித்த திறன் வளர்ப்பு பயிற்சி, நேற்று நடந்தது.ஊராட்சி தலைவர், கிராம நிர்வாக அலுவலர், பள்ளி தலைமையாசிரியர், கிராம செவிலியர், குழந்தைகள் நல ஆர்வலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.ஊராட்சி தலைவர் ஆனந்தன், குழந்தைகள் உரிமைக்கான தோழமை கூட்டமைப்பின் தலைவர் முனைவர் தேவன்பு பங்கேற்று, குழந்தை தொழிலாளர் முறையை ஒழித்தல், பாலியல் வன்கொடுமைகளிலிருந்து பாதுகாத்தல் குறித்து பேசினர்.

திருக்குறள் கற்க அழைப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் உள்ள உலகப் பொதுமறை திருக்குறள் பேரவை சார்பில், மழலையர் வகுப்பு முதல், கல்லுாரி வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவ - மாணவியருக்கு, திருக்குறளையும் மனப்பாடம் செய்ய இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

காஞ்சிபுரம் கா.மு.சுப்பராய முதலியார் அரசு மேல்நிலைப் பள்ளியில், சனிக்கிழமை காலை 6:45 மணி முதல் 7:45 மணி வரையிலும், ஞாயிறன்று, காலை 10:00 மணி முதல் 12:30 மணி வரை வகுப்பு நடைபெறும்.ஆர்வமுள்ள மாணவர்கள் 98942 27612, 93643 23915 ஆகிய மொபைல் போன் எண்களில், தொடர்பு கொள்ளலாம்.இருளர்களுக்கு விழிப்புணர்வுபுதுப்பட்டினம்: கல்பாக்கம் அடுத்த, வாயலுார் ஊராட்சி ஐந்துகாணி பகுதியில், இருளர்கள் வசிக்கின்றனர்.

இங்கு சென்னை ஹிந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லுாரியின், சமூக பணித் துறை குழுவினர் முகாமிட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.'மீள்க' என நிகழ்ச்சி நடத்தி, சிறுவர், பெண்கள் பாதுகாப்பு, கல்வி கற்கும் அவசியம், சிறுவர் ஒழுக்கநெறி, வெள்ளச்சூழல் தற்காப்பு உள்ளிட்டவை குறித்து விளக்கி, ஆடல், பாடல் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

 

Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X