பெண்ணிடம் சங்கிலி பறிப்பு
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் நால்வர்கோவில்பேட்டை, உமாசங்கர் மனைவி ரேவதி, 36; கூவத்துார், அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர். நேற்று முன்தினம் மாலை, பணி முடித்து, ஸ்கூட்டரில் திரும்பி கொண்டிருந்தார். திருக்கழுக்குன்றம் அடுத்த, மங்கலம்
பகுதியில், இரவு 7:15 மணிக்கு கடந்தபோது, இருசக்கர வாகனத்தில், தலைக்கவசம் அணிந்து பின்தொடர்ந்து வந்த வாலிபர், அவரை நிறுத்தி, 4 சவரன் சங்கிலியை பறித்து தப்பினார். ரேவதி புகாரை வைத்து, போலீசார் வாலிபரை தேடுகின்றனர்.