நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு, சி.என்.பாளையம் கிராமங்களில் உள்ள விவசாயிகளின் நிலங்களுக்கு பட்டா மாற்றும் சிறப்பு முகாம் நடுவீரப்பட்டு வி.ஏ.ஓ.,அலுவலகத்தில் நடந்தது.
கடலுார் மண்டல துணை தாசில்தார் அசோகன் தலைமை தாங்கி விவசாயிகளிடமிருந்து பட்டா மாற்றும் மனுக்களை பெற்றார். கடலுார் தலைமை நில அளவர் திருமலை, நிலஅளவர் அலமேலு மங்கை, ஹரிஹரன், நடுவீரப்பட்டு வி.ஏ.ஓ., ஞானமணி, சி.என்.பாளையம் வி.ஏ.ஓ., ஜெயந்தி பங்கேற்றனர்.நிகழ்ச்சியில் 30 மனுக்கள் பெறப்பட்டு 10 பேருக்கு உடனடியாக பட்டா வழங்கப் பட்டது.