வாலிபரை தேடும் பணியில் போலீசார் | கடலூர் செய்திகள் | Dinamalar
வாலிபரை தேடும் பணியில் போலீசார்
Advertisement
 

பதிவு செய்த நாள்

05 டிச
2021
05:42

விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே ஆற்றில் இழுத்துச் செல்லப்பட்ட வாலிபரை தேடும் பணி, இரண்டாம் நாளாக நேற்றும் தொடர்ந்தது.கடலுார் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கோ.ஆதனுாரைச் சேர்ந்தவர் வேல்முருகன் மகன் வினோத்குமார், 21. நேற்று முன் தினம் பகல் 11:30 மணியளவில், நண்பர்கள் மதியழகன், ரஞ்சித்குமார், விக்ரமன் ஆகியோருடன் வி.குமாரமங்கலம் மணிமுக்தாறு அணைக்கட்டில் குளிக்கச் சென்றார்.

அப்போது, நீரின் வேகத்தில் வினோத்குமார், மதியழகன் இழுத்துச் செல்லப்பட்டனர். விருத்தாசலம் தீயணைப்பு நிலைய வீரர்கள், கம்மாபுரம் போலீசார் சென்று,மதியழகனை மீட்டனர். வினோத்குமார் நீரில் இழுத்துச் செல்லப்பட்டார்.கடலுார் வெள்ள மீட்புக்குழுவை சேர்ந்த சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் மில்டன் தலைமையிலான போலீசார் மற்றும் மீனவ ஊர்க் காவல் படையினர் இணைந்து ரப்பர் போட் மூலம் அணைக்கட்டு பகுதியில் நேற்று காலை முதல் தேடும் பணியில் ஈடுபட்டனர்.இருப்பினும், மாலை 4:00 மணி வரை, வினோத்குமார் குறித்த தகவலும் கிடைக்கவில்லை. துபாயில் இருந்த வினோத்குமார் தந்தை வேல்முருகன் அவசரமாக ஊருக்கு திரும்பினார்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X