நெல்லிக்குப்பம், : நெல்லிக்குப்பம் அடுத்த எய்தனுாரில் தமிழக அரசின் இல்லம் தேடி கல்வி திட்டம் துவக்க விழா நடந்தது.மாவட்ட கல்வி அலுவலர் அமுதா தலைமை தாங்கினார்.
மாணவ, மாணவிகளுக்கு சி.இ.ஓ., பூபதி மாலையணிவித்து ஊர்வலமாக அழைத்து சென்று வாழ்த்தி பேசினார். ஊராட்சி தலைவர் சரசு, வட்டார கல்வி அலுவலர் அந்தோணிராஜ், வட்டார வள மைய மேற்பார்வையாளர் மோகன், ஆசிரியர் பயிற்றுனர்கள் வசந்தி, உமாதேவி, சுந்தரமூர்த்தி, ஆரோக்கியம், செழியன் பங்கேற்றனர்.மந்தாரக்குப்பம்மந்தாரக்குப்பம் அடுத்த புது இளவரசம்பட்டு ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் நடந்த விழாவிற்கு தலைமை ஆசிரியர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். தன்னார்வலர் அனிதா வரவேற்றார். மேல்பாதி ஊராட்சித் தலைவர் கரும்பாயி வீரப்பன் கல்வி உபகரணங்களை வழங்கி இல்லம் தேடி கல்வித் திட்டத்தை துவக்கி வைத்தார். ஆசிரியர் பயிற்றுனர் ராஜேந்திரன், பள்ளிக் குழு தலைவர் சண்முகம் உட்பட பலர் பங்கேற்றனர்.