புவனகிரி : கீரப்பாளையம் ஒன்றிய சுற்றுப்பகுதி கிராமங்களில் மேற்கொள்ளப்பட்ட நடவு பயிர்களில் ஏற்பட்டுள்ள மஞ்சள் நோய் தாக்குதலால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்
.கீரப்பாளையம் ஒன்றியத்தில், ஒரத்துார், சாக்கங்குடி, தேவன்குடி, துணிசரமேடு மற்றும் ஐயனுார் உட்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் நடவு செய்திருந்த பயிர்களில் தண்ணீர் தேங்கி, அழுகின. விவசாயிகள் உரமிட்டு பாதிப்பை சரி செய்தனர். இருப்பினும் நாற்றுகளில் மஞ்சள் நோய் புகையான் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கடும் மன உளைச்சல் அடைந்துள்ளனர். விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கவும், உரம் தட்டுப்பாட்டை சரி செய்யவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.