திருச்சானூர் தாயார் கோயில் பிரம்மோற்சவம் ஐந்து வெண்பட்டு திருக்குடைகள் சமர்ப்பணம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 டிச
2021
05:58

திருச்சானுார் தாயார் கோயில் பிரம்மோற்சவம்ஐந்து வெண்பட்டு திருக்குடைகள் சமர்ப்பணம்



இந்து தர்மார்த்த சமிதி வழங்கியது*திருமலை, டிச. 5-ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டம், திருப்பதி அருகே உள்ள திருச்சானுார் பத்மாவதி தாயார் கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் பிரம்மோற்சவம் நடக்கும்.



இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவம் கடந்த மாதம் 30ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரமோற்சவத்தின் முக்கிய திருநாளான வசந்த உற்சவம் நேற்று நடந்தது.தாயார் கோயில் பிரமோற்சவத்தில், சென்னையைச் சேர்ந்த இந்து தர்மார்த்த சமிதி டிரஸ்ட் சார்பில், 5 வெண்பட்டு குடைகள் நேற்று சமர்ப்பிக்கப்பட்டது.



இதையொட்டி, கோயில்முன் அமைந்துள்ள வாகன மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில், இந்து தர்மார்த்த சமிதி டிரஸ்ட் அறங்காவலர் ஆர்ஆர். கோபால்ஜி திருக்குடைகளை, கோயில் நிர்வாகத்திடம் சமர்ப்பித்தார். பட்டுச்சேலை, மங்கலப்பொருட்களும் தாயாருக்கு சமர்ப்பிக்கப்பட்டன. அவற்றை தேவஸ்தான அதிகாரிகள் பெற்றுக்கொண்டனர். தாயார் கோயில் பிரமோற்சவத்தின் முக்கிய திருநாளாக நேற்று இரவு நடந்த கஜவாகன சேவையில் திருக்குடைகள் பயன்படுத்தப்பட்டன.



திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம், காளஹஸ்தி காளத்தீஸ்வரர் கோயில் மகா சிவராத்திரி பிரம்மோற்சவம், காணிப்பாக்கம் விநாயகர் கோயில் பிரம்மோற்சவம், விஜயவாடா கனகதுர்க்கை அம்மன் கோயில் பிரம்மோற்சவங்களின்போதும், ஆண்டுதோறும், இந்து தர்மார்த்த சமிதி டிரஸ்ட் சார்பில், வெண்பட்டு திருக்குடைகளை ஆர்ஆர். கோபால்ஜி சமர்ப்பித்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X