அழுகிய நிலையில் சடலம்
இளம்பெண் மாயம்
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லுாரை சேர்ந்தவர் நுாருல் அமீன், 49; இவரது மகள் நுாருல் அயின், 22; இவர், நேற்று முன்தினம், 8 சவரன் நகை மற்றும் ரூ. 15 ஆயிரத்துடன் வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் திரும்பி வரவில்லை. புகாரின் பேரில், பரங்கிப்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் சிவராமன் வழக்குப் பதிந்து, நுாருல் அயினை, தேடி வருகிறார்
.வாலிபர் தற்கொலை
சிதம்பரம்: சிதம்பரம் சம்மந்தக்கார தெருவை சேர்ந்தவர் வெங்கட்ராமன் மகன் சேதுராமன், 21; பொறியியல் படித்து விட்டு சென்னையில் தனியார் கம்பெனியில் வேலை செய்தார். விடுமுறையில் வீட்டிற்கு வந்தவர், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில் சிதம்பரம் நகர போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
ரயில்வே பாலத்தில் ஒருவர் தற்கொலை
சிதம்பரம்: சிதம்பரம் அடுத்த வடக்குமாங்குடி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் கலைக்கண்ணன், 23; ஏ.சி.,மெக்கானிக் வேலை செய்தார். ராஜேந்திரன் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு துாக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
அதன் பின்பு கலைக்கண்ணன் மனமுடைந்திருந்தார். நேற்று கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே செல்லும் ரயில்வே பாலத்தில் உள்ள ஏணியில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். சிதம்பரம் ரயில்வே இன்ஸ்பெக்டர் அருண் மற்றும் போலீசார் உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.