கடலுார் : தமிழக அரசின் கபிர் புரஸ்கார் விருதிற்கு தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார். கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:
ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று தமிழ்நாடு சமூக, வகுப்பு நல்லிணக்கத்திற்காக பணியாற்றியவர்கள் மற்றும் தனது உயிரை பொருட்படுத்தாமல் மற்றவர்களை காப்பாற்றியவர்களுக்கு கபிர் புரஸ்கார் விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான விருதிற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழகத்தை சேர்ந்த அரசுப் பணியாளர்கள், சீருடைப் பணியாளர்கள் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரிடமிருந்து விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் 3 நகல்களை, கடலுார் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரிடம் 08-ம் தேதி மாலை 5.00 மணிக்குள் ஒப்படைக்க வேண்டும். பெறப்படும் கருத்துருக்கள், கலெக்டரின் பரிசீலனைக்குப் பிறகு பரிந்துரையுடன் அரசிற்கு அனுப்பி வைக்கப்படும்.