கடலுார் : கடலுார் மாவட்டத்தில் நேற்று 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியது. இதனையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 64 ஆயிரத்து 421 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று 6 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். குணமடைந்தோர் எண்ணிக்கை 63 ஆயிரத்து 475 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதித்த 62 பேர் சிகிச்சை பெறுகின்றனர். இதுவரை தொற்று பாதித்து சிகிச்சை பலனின்றி 872 பேர் இறந்த நிலையில், நேற்று இறப்பு இல்லை.