விழுப்புரம், : விழுப்புரம் இ.எஸ்.எஸ்.கே., கல்விக்குழுமம் சார்பில் 'கல்லுாரிகளுக்கு இடையிலான போட்டிகளில் வென்றவர்களுக்கான பரிசளிப்பு விழா நடந்தது.விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சிக்கு, செயலாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். முதல்வர் பிருந்தா வரவேற்றார்.
இ.எஸ்.எஸ்.கே., கல்விக்குழுமம் துணை பதிவாளர் தியாகராஜன் முன்னிலை வகித்தார்.புதுச்சேரி பல்கலைக்கழக, தமிழாய்வுத் துறை, இணை பேராசிரியர் கருணாநிதி, மாணவ, மாணவிகளின் முன்னேற்றம் குறித்து பேசினார். முதல்வர்கள் சக்திவேல், பொற்செல்வி, சண்முகராஜ், முருகன் வாழ்த்திப் பேசினர்.கல்லுாரிகளுக்கு இடையே நடந்த பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு, பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.சுழல்கோப்பை மற்றும் அதிக பதக்கங்களை பெற்ற தெய்வானை மகளிர் கல்லுாரிக்கும், தனி நபருக்கான சுழல் கோப்பை இ.எஸ்., நர்சிங் கல்லுாரி மாணவி விக்னேஷ்வரிக்கும் வழங்கப்பட்டது. மாணவிகள், பேராசிரியர்கள் பங்கேற்றனர். துணை முதல்வர் செல்வி நன்றி கூறினார்.