சேலம்: வரும், 11ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடக்க உள்ளதால் பயன்படுத்திக் கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, சேலம் மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுரு வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு சட்டப்பணி ஆணைக்குழு வழிகாட்டுதல்படி, சேலம், அஸ்தம்பட்டியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றம், சங்ககிரி, ஆத்தூர், மேட்டூர், ஓமலூர் நீதிமன்றங்களில், டிச., 11ல், தேசிய மக்கள் நீதிமன்றம் நடக்க உள்ளது. இதில் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள சமரசம் செய்து கொள்ளக்கூடிய குற்ற வழக்கு, காசோலை, வங்கி கடன், கல்வி கடன், மோட்டார் வாகன விபத்து வழக்கு, தொழிலாளர் நலன், உரிமையியல், விற்பனை வரி, சொத்துவரி பிரச்னை உள்ளிட்ட வழக்குகளையும், நீதிமன்ற முன் வழக்குகளையும் விரைவாக, சமரச முறையில் தீர்வு காண முடியும். அதனால், இந்த வாய்ப்பை மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.