ஆத்தூர்: ஆத்தூர், நாராயணசாமி தெருவிலுள்ள ரேஷன் கடையில், 2020, ஜன., 9ல், பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. அப்போது, அ.தி.மு.க., - தி.மு.க., நிர்வாகிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதுதொடர்பாக, அ.தி.மு.க., வார்டு பிரதிநிதி புரு ?ஷாத்தமன், மகளிர் அணி நிர்வாகி ராணி ஆகியோர், தி.மு.க.,வின் முன்னாள் கவுன்சிலர் ஸ்டாலின், முன்னாள் கவுன்சிலர் செண்பகம் கணவர் தம்பிதுரை மீது ஆத்தூர் டவுன் போலீசில் அளித்த புகாரில், 4 பிரிவுகளில் வழக்குப்பதிந்தனர். இந்த வழக்கு, ஆத்தூர் முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்தது. நேற்று, மாஜிஸ்திரேட் ரங்கராஜ், தி.மு.க., நிர்வாகிகள் ஸ்டாலின், தம்பிதுரையை விடுவித்து உத்தரவிட்டார்.