கிருஷ்ணகிரியில் சிறப்பு முகாம்: 61,500 பேருக்கு தடுப்பூசி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 டிச
2021
14:41

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உட்பட, 722 இடங்களில் நேற்று கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது. ஒமைக்ரான் தொற்று, தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு வரத்தடை உள்ளிட்ட காரணங்களால் வழக்கத்தை விட நேற்று நடந்த முகாமில் பலர் ஆர்வமுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். மேலும், சூளகிரியில் நடந்த முகாமில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. காவேரிப்பட்டணம் சவுளூரில் நடந்த முகாமை கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி ஆய்வு செய்தார். நேற்று கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த முகாமில், வயதானவர்களுக்கு என தனி வரிசை இல்லாததால் வரிசையில் நிற்க முடியாத முதியோர் பலர் திரும்பிச் சென்றனர். நேற்று மாலை, 6:00 மணி வரை, 61 ஆயிரத்து, 524 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். கடந்த வார முகாமில், 20 ஆயிரத்து, 935 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

* தர்மபுரி, பென்னாகரம், பாலக்கோடு, காரிமங்கலம், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி உட்பட, மாவட்டத்தின், பல்வேறு பகுதிகளில் நேற்று, 855 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. இதில், 10 ஆயிரத்து, 90 பேர் முதல் தவணை டோஸ், 19 ஆயிரத்து, 222 பேர், இரண்டாம் தவணை டோஸ் என மொத்தம், 29 ஆயிரத்து, 312 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.


* ஓசூர் அடுத்த உத்தனப்பள்ளியில் நடந்த முகாமில் தடுப்பூசி செலுத்தி கொண்ட மக்களுக்கு, பஞ்., தலைவர் லட்சுமிகாந்த், சில்வர் தட்டுகளை பரிசாக வழங்கினார்.


 

Advertisement
மேலும் கிருஷ்ணகிரி மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X