மாயனூர் கதவணைக்கு நீர் வரத்து மீண்டும் அதிகரிப்பு | கரூர் செய்திகள் | Dinamalar
மாயனூர் கதவணைக்கு நீர் வரத்து மீண்டும் அதிகரிப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

05 டிச
2021
14:52

கரூர்: மாயனூர் கதவணைக்கு வரும், தண்ணீரின் அளவு நேற்று மீண்டும் அதிகரித்தது.

கரூர் அருகே, மாயனூர் கதவணைக்கு நேற்று முன்தினம் காலை வினாடிக்கு, 15 ஆயிரத்து, 657 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி, 26 ஆயிரத்து, 984 கன அடியாக வரத்து அதிகரித்தது. காவிரியாற்றில், சம்பா சாகுபடிக்காக , 26 ஆயிரத்து, 364 கன அடி தண்ணீரும், மூன்று பாசன வாய்க்காலில், 620 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது.

அமராவதி அணை: திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து, 1,763 கன அடியாக இருந்தது. அமராவதி ஆற்றில், 1,500 கன அடியும், புதிய பாசன வாய்க்காலில், 250 கன அடியும் திறக்கப்பட்டது. 90 அடி உயரம் கொண்ட, அணையின் நீர்மட்டம், 87.50 அடியாக இருந்தது. கரூர் அருகே, அமராவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள, பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு, நேற்று காலை, 4,337 கன அடி தண்ணீர் வந்தது.

ஆத்துப்பாளையம் அணை: க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து இல்லை. இதனால் நொய்யல் வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. 26.90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம், 26.50 அடியாக இருந்தது.

நங்காஞ்சி அணை: திண்டுக்கல் மாவட்டம், வடகாடு மலைப் பகுதிகளில் மழை பெய்து வருவதால், நங்காஞ்சி அணைக்கு நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி, 220 கன அடி வந்தது. நங்காஞ்சி ஆற்றில், 180 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. அணை நீர்மட்டம், 39.37 அடியாக இருந்தது.

கரூர் மாவட்ட மழை நிலவரம்: நேற்று காலை, 8:00 மணி வரை கடந்த, 24 மணி நேரத்தில் கரூர் நகரில் மட்டும், 58 மி.மீ., மழை பெய்தது.

 

Advertisement
மேலும் திருச்சி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X