கரூரில் விடிய விடிய மழை: 58 மி.மீ., பதிவு | கரூர் செய்திகள் | Dinamalar
கரூரில் விடிய விடிய மழை: 58 மி.மீ., பதிவு
Advertisement
 

பதிவு செய்த நாள்

05 டிச
2021
14:53

கரூர்: கரூரில் நேற்று அதிகாலை வரை விடிய விடிய மழை பெய்தது. தென் தமிழக பகுதியில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மழை மாவட்டங்களில் நேற்று பலத்த மழை பெய்யும் என, சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில், நேற்று அதிகாலை முதல் கரூர் மற்றும் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது. நேற்று காலை, 8:00 மணி வரை கடந்த, 24 மணி நேரத்தில் கரூர் நகரில் மட்டும், 58 மி.மீ., மழை பெய்தது. மதியம், 12:00 மணி வரை கரூர் நகர், திருகாம்புலியூர், வெங்கமேடு, தான்தோன்றிமலை, சுங்க கேட், காந்தி கிராமம், பசுபதிபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கன மழை பெய்தது. இதனால், கரூர்-திருச்சி சாலை சுங்ககேட் கலைஞர் நகர், கணபதி நகர் பகுதியில் உள்ள வீடுகளில் மழை நீர் புகுந்தது. கார்கள், டூவீலர்கள் நீரில் மூழ்கின. நகராட்சி ஊழியர்கள் மின் மோட்டார் மூலம், தண்ணீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அதேபோல், கரூர்-ஈரோடு சாலை ஆத்தூர் பிரிவு சஞ்சய் நகரில், ஒரு சில வீடுகளில் தண்ணீர் புகுந்தது. அந்த தண்ணீரும் மின் மோட்டார்கள், மூலம் அகற்றப்பட்டது.

மின் துறை அமைச்சர் ஆய்வு: கரூர் சுங்ககேட் கலைஞர் நகர், கணபதி நகர் பகுதி வீடுகளில் நேற்று அதிகாலை தண்ணீர் புகுந்தது. அதை அகற்றும் பணியில், நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது, மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு செய்தார். கலெக்டர் பிரபு சங்கர், மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

 

Advertisement
மேலும் திருச்சி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X