கரூர்: கரூர் மாவட்ட, அ.தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, 2016 டிச., 5ல் உடல் நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார். அவர் மறைந்து, இன்றுடன் ஐந்தாண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி, கரூர் மாவட்ட, அ.தி.மு.க., மற்றும் சார்பு அணிகள் சார்பில் கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. மாநில அமைப்பு செயலாளர் சின்னசாமி, மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான, எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.