பெண் மேலாளர் கணவரிடம் மோசடி: குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது | கரூர் செய்திகள் | Dinamalar
பெண் மேலாளர் கணவரிடம் மோசடி: குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
Advertisement
 

பதிவு செய்த நாள்

05 டிச
2021
14:54

கரூர்: கரூரில் வங்கி மேலாளர் கணவருக்கு, பெண்களின் புகைப்படங்களை அனுப்பி பணம் பறித்த, வாலிபர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

கரூரை சேர்ந்தவர் அபர்ணா, 27; தனியார் வங்கி மேலாளர். இவரது கணவர் நந்தகுமாரின் மொபைல் போனுக்கு, பெண்கள் சிலரின் புகைப்படங்களை கடந்த நவ., 1ல் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அனுப்பியுள்ளார். பிறகு நந்தகுமாரை மிரட்டி, 49 ஆயிரம் ரூபாயை ஆன்லைன் மூலம் பறித்துள்ளார். இதுகுறித்து, சைபர் க்ரைம் போலீசில் அபர்ணா புகார் செய்தார். விசாரணையில் பண மோசடி செய்த நபர்கள், பொள்ளாச்சியை சேர்ந்த அஜித்குமார், 49; பிரசாந்த், 27; என தெரியவந்தது. இரண்டு பேரையும் சைபர் க்ரைம் போலீசார் கைது செய்தனர். அதில், பிரசாந்தை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய, கலெக்டர் பிரபு சங்கர் நேற்று உத்தரவிட்டார். இதையடுத்து, திருச்சி மத்திய சிறையில் உள்ள பிரசாந்த்துக்கு, குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கான நகல் வழங்கப்பட்டது.

 

Advertisement
மேலும் திருச்சி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X