கிணற்றில் தவறி விழுந்து பள்ளி மாணவர் பலி | கரூர் செய்திகள் | Dinamalar
கிணற்றில் தவறி விழுந்து பள்ளி மாணவர் பலி
Advertisement
 

பதிவு செய்த நாள்

05 டிச
2021
14:54

குளித்தலை: குளித்தலை அடுத்த, கழுகூர் பஞ்., மேலகம்பேஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகர் மகன் நவீன்குமார், 16. பத்தாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று, தோட்டத்திற்கு சிறுவன் சென்றதாக தெரிகிறது. வெகுநேரம் ஆகியும் வரவில்லை. ராஜசேகர் தோட்டத்திற்குசென்று பார்த்தார். அப்போது அங்குள்ள கிணற்றில் ஓடை சரிந்த நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். அருகில் உள்ளவர்களின் உதவியுடன் கிணற்றில் இறங்கி பார்த்தபோது நவீன்குமார் நீரில் மூழ்கி இறந்து கிடந்தது தெரிந்தது. தோகைமலை போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் திருச்சி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X