குளித்தலை: குளித்தலை அடுத்த, பொய்கைபுதூரை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி, 60. இவர் கடந்த, 1ல், தனக்கு சொந்தமான வயலில் நின்று கொண்டிருந்தார். அங்கு வந்த அவரது மகன் சிவகுமார், அதே ஊரைச் சேர்ந்த கோவிந்தன் மகன் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சுந்தரமூர்த்தியை தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த அவர், குளித்தலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து, புகார் படி, லாலாப்பேட்டை போலீசார் வழக்குபதிந்து, இருவரையும் தேடி வருகின்றனர்.