கிருஷ்ணராயபுரம்: அந்தரப்பட்டி தரைப்பாலத்தில், மழைநீர் தேங்கியதால் மக்கள் அவதிப்படுகின்றனர். கிருஷ்ணராயபுரம் அடுத்த, சிந்தலவாடி பஞ்.,க்குட்பட்ட புனவாசிப்பட்டி முதல், அந்தரப்பட்டி வரை தார்ச்சாலை உள்ளது. மழைநீர் செல்ல, சாலை நடுவில் தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. அப்பகுதி மேடாக உள்ளதால், மழை நீர் செல்லாமல், தேங்கி நிற்கிறது. இதனால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்படுகின்றனர். தரைப்பாலத்தில் தண்ணீர் தேங்காமல் இருக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.