அரசு பள்ளி மாணவர்களுக்கு அரிசி வழங்கும் பணி | செய்திகள் | Dinamalar
அரசு பள்ளி மாணவர்களுக்கு அரிசி வழங்கும் பணி
Advertisement
 

பதிவு செய்த நாள்

06 டிச
2021
01:42

புதுச்சேரி : உப்பளம் தொகுதியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு திட்ட அரிசி வழங்கும் பணியை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.புதுச்சேரி மாநிலத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, இன்று 6ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.



பள்ளி திறக்கப்படாத ஆறு மாத காலக்கட்டத்தில் இம்மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படவில்லை. அதற்கு பதிலாக அரிசி பள்ளிகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. உப்பளம் பாடசாலை வீதியில் உள்ள காமராஜர் அரசு நடுநிலை பள்ளியில் மதிய உணவு திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு அரிசி வழங்கப்பட்டது. இப்பணியை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். பள்ளி தலைமையாசிரியர், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X