அரியாங்குப்பம், : முதலியார்பேட்டையில் ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டர் மாரடைப்பால் இறந்தார்.முருங்கப்பாக்கம் அரவிந்தர் நகரை சேர்ந்தவர் முரளி, 63,;
இவர் கடலுார் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். நேற்று முன்தினம் மாலை நெஞ்சு வலி காரணமாக அவர் ஜிப்பர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து முதலியார்பேட்டை ஏட்டு சரவணன் வழக்கு பதிந்துள்ளார்.