புதுச்சேரி : மத்திய எரிசக்தி சிக்கன நிறுவனம் சார்பில், பள்ளி மாணவர்களுக்கு மாநில அளவிலான ஓவியப் போட்டி நடந்தது.
புதுச்சேரி தந்தை பெரியார் நகரில் இயங்கி வரும் பிரிட்ஜெஸ் லேர்னிங் வித்யாலயா பள்ளியில், மத்திய எரிசக்தி சிக்கன நிறுவனம் சார்பில் மாநில அளவிலான ஓவிய போட்டி நடந்தது.மத்திய எரிசக்தி சிக்கன நிறுவன திட்ட மேலாளர் சரஸ்வதி, ஒருங்கிணைப்பாளர் முருகன் ஆகியோர் சிறப்புரையாற்றி, போட்டியை துவக்கி வைத்தனர்.
மாணவர்கள் எரிசக்தி சேமிப்பு குறித்து ஓவியம் தீட்டினர். பள்ளி தாளாளர் புவனா வாசுதேவன் உள்பட பலர் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற மாணவர் களுக்கு சான்றிதழ், பரிசுகள் வழங்கப்பட உள்ளது.