அரசு பள்ளி மாணவர்களுக்கு 'நீட்' மாதிரி தேர்வு நடத்த முடிவு | செய்திகள் | Dinamalar
அரசு பள்ளி மாணவர்களுக்கு 'நீட்' மாதிரி தேர்வு நடத்த முடிவு
Added : டிச 06, 2021 | கருத்துகள் (3) | |
Advertisement
 
Latest district News

சென்னை- --அரசு பள்ளிகளில் படிக்கும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, நீட் தேர்வுக்கான மாதிரி தேர்வு நடத்தவும், வினா வங்கி வழங்கவும்,பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளது



.பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள் மருத்துவ கல்வியில் சேர, நீட் நுழைவு தேர்விலும்; ஐ.ஐ.டி., போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர, ஜே.இ.இ., நுழைவு தேர்விலும் தேர்ச்சி பெற வேண்டும்.மத்திய அரசு நடத்தும்நீட் தேர்வுக்கு, தமிழக அரசு பல ஆண்டுகளாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆனாலும், அரசு பள்ளி மாணவர்களுக்கு, நீட் தேர்வுக்கான பயிற்சிகள் தொடர்ந்து வழங்கப்படுகின்றன.இந்த முறை, அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி அளிப்பதுடன், அவர்களுக்கு மாதிரி தேர்வுகளை நடத்தவும், நீட் தேர்வுக்கான வினா வங்கி வழங்கவும்,பள்ளி கல்வித்துறை முடிவெடுத்துள்ளது.

இதற்காக மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் வழியே ஏற்பாடுகள் துவங்கி உள்ளன.வேலுார், திருவண்ணாமலை, சேலம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் இருந்து, அரசு பள்ளி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு நீட் மாதிரி தேர்வு மற்றும் வினா வங்கி தயாரிக்கும் பணி வழங்கப்பட்டுள்ளது.நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு, மருத்துவ சேர்க்கையில் 7.5 சதவீதஇட ஒதுக்கீடு வழங்கும்திட்டம், தி.மு.க., ஆட்சியிலும் தொடர்கிறது.அந்த வகையில், நீட் தேர்வை தமிழக மாணவர்கள் எதிர்கொள்ள தேவையான உதவிகளை, தமிழக அரசு அதிகரித்து வருவதால், தமிழக அரசின் நீட் எதிர்ப்பு, வருங்காலங்களில் படிப்படியாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X