புதுச்சேரி : இரட்டை கொலை வழக்கில், நாட்டு வெடிகுண்டு தயாரித்து கொடுத்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.புதுச்சேரி தாவீதுபேட் நகராட்சி குடியிருப்பைச் சேர்ந்த ரவுடி பாம் ரவி, 33; இவரது ஆதரவாளர் அந்தோணி பரிடா ஸ்டீபன், 28.இருவரும் கடந்த அக். 24ம் தேதி, வாணரப்பேட்டை ஆலன் வீதியில் வெடிகுண்டு வீசி, வெட்டி கொலை செய்யப்பட்டனர்.
முதலியார்பேட்டை போலீசார் கொலை வழக்கு பதிந்து, அரவிந்தன், பிரகாஷ் உள்ளிட்ட 9 பேரை கைது செய்தனர். வாணரப்பேட்டை அருண், ரெட்டிச்சாவடி பிரவீன் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.அருண், பிரவீன் ஆகிய இருவரை போலீசார் காவலில் எடுத்த விசாரித்தனர்.லாஸ்பேட்டை மடுவுபேட் மாரியம்மன் கோவில் வீதி வெங்கடேஷ், 24; நெருப்புகுழி தேவராஜ், 26; புதுப்பேட்டை அகத்தியர் வீதி சதிஷ்குமார், 28; சாரம் லட்சுமி நகர் மிதுன்குமார், 28; லாஸ்பேட்டை கெங்கையம்மன் கோவில் வீதி திவாகர், 28; ஆகியோர் நாட்டு வெடிகுண்டு தயாரித்து கொடுத்ததாக வாக்குமூலம் அளித்தனர்.
நாட்டு வெடிகுண்டு கொடுக்கும் சி.சி.டி.வி. காட்சிகளும் வெளியானது.அதையடுத்து, வெங்கடேஷ் உள்ளிட்ட ஐந்து பேரையும் சிறப்பு அதிரடிப்படை இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் கைது செய்து, முதலியார்பேட்டை போலீசில் ஒப்படைத்தனர்.ஐந்து பேரும் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.