நரிக்குறவர்களுக்கு குடியிருப்பு; கவர்னர் தமிழிசை உறுதி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 டிச
2021
02:20


வில்லியனுார் : ஒதியம்பட்டு நரிக்குறவர் காலனியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியை கவர்னர் தமிழிசை வழங்கினார்.வில்லியனுார் அருகே உள்ள ஒதியம்பட்டு நரிக்குறவர் காலனியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரெட் கிராஸ் சார்பில் நிவாரணம் வழங்கப் பட்டது. கவர்னர் தமிழிசை நிவாரண பொருட்களை வழங்கி, வீடுகளை பார்வையிட்டார்.




அப்பகுதி மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். குழந்தைகளுக்கு பாடபுத்தகங்கள், நோட்டுகள் மற்றும் எழுது பொருட்கள் ஆகியவற்றை வழங்கினார்.பின்னர் கவர்னர் தமிழிசை கூறியதாவது:ஒதியம்பட்டு நரிக்குறவர் காலனியில் வீடுகளைப் பார்வையிட்டேன். பாழடைந்து, இடிந்துபோன நிலையில் உள்ளன. பெண்கள் கழிவறை வசதி வேண்டும் என கேட்டுக்கொண்டனர். நிரந்தர கழிவறைகள் கட்டுவதற்கு முன், நடமாடும் கழிவறையை உடனடியாக நிறுத்தும்படி அதிகாரிகளிடம் கூறியிருக்கிறேன். முதல்வருடன் ஆலோசனை நடத்தி, நரிக்குறவர்களுக்கு வீடுகள் கட்டித் தரப்படும்.புதுச்சேரியில் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தடுப்பூசிகள் கொரோனா வைரஸ்களில் இருந்து பாதுகாப்பு தருகிறது. இந்தியாவில் ஒமைக்ரான் வைரசால் இதுவரை 5 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர்.



பிரதமர், ஊரடங்கு அறிவிக்கவில்லை என்றால் பாதிப்பு அதிகரித்திருக்கும். கொள்ளை நோய்க்கு எதிராக மக்களை பாதுகாப்பாக இருக்க கட்டாயப்படுத்த வேண்டிய நிலை உள்ளது. எனவே மக்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.புதுச்சேரி வளர்ச்சியடைய, மத்திய அரசு தனி கவனம் செலுத்தி வருகிறது. புதுச்சேரியில் நிர்வாக ரீதியான அனைத்தும் சரியாக நடந்து வருகிறது.இவ்வாறு அவர் கூறினார். சுகாதார துறை இயக்குனர் ஸ்ரீராமுலு, ரெட் கிராஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X