சேதமான சாலைகளை சீரமைக்க காங்., வலியுறுத்தல் | செய்திகள் | Dinamalar
சேதமான சாலைகளை சீரமைக்க காங்., வலியுறுத்தல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

06 டிச
2021
02:25

புதுச்சேரி : புதுச்சேரி காங்., அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது.மாநிலத் தலைவர் சுப்ரமணியன், தலைமை தாங்கினார். முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் கந்தசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



இக்கூட்டத்தில், கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, ரேஷன் கார்டுகளுக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டுமென காங்., வலியுறுத்திய நிலையில், அரசு ரூ.5000 மட்டும் நிவாரணம் அறிவித்துள்ளது. இந்த நிவாரணத் தொகையை முதல்வர் காலம் கடத்தாமல் உடனடியாக வழங்க வேண்டும்.வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாய பயிர்களுக்கு, ஏக்கர் ஒன்றிற்கு ரூ.50 ஆயிரம் நிவாரணமாக அளிக்க வேண்டும். புதுசேரியில் சேதமடைந்துள்ள சாலைகளை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும். மின் துறையை தனியார்மயமாக்குவதை புதுச்சேரி அரசு ஏற்றுக் கொள்ளக் கூடாது. பிற்படுத்தப்பட்ட சமுதாய குழந்தைகளுக்கு இலவச கல்வித் திட்டத்தை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X