கடலுார் : டாஸ்மாக் நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என, தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்க சிறப்புத் தலைவர் பாலசுப்பிரமணியன் கூறினார்.
கடலுாரில் அவர் அளித்த பேட்டி:தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்க மாநிலத் தலைவர் சரவணனை சஸ்பெண்ட் செய்ததை ரத்து செய்ய வேண்டும்.கடலுாரில் வரும் 10ம் தேதி தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கம் மற்றும் இணைப்பு சங்கங்கள் சார்பில் நடக்கும் கண்டன கூட்டத்தில் டாஸ்மாக் நிர்வாகத்தின் செயல்பாடுகள், ஊழியர்கள் பிரச்னை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்.
டாஸ்மாக் திறப்பு நேரம் காலை 12:00 முதல் இரவு 10:00 மணி என மாற்றியது பணியாளர்கள், பொது மக்கள், பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலையை ஏற்படுத்தும். மதுரையில் பெண்களுக்கு தனியாக மதுபான பார் திறக்கக் கூடாது என தமிழக முதல்வர் உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.டாஸ்மாக் பணியாளர் சங்க மாநிலத் தலைவர் சரவணன், மாவட்டத் தலைவர் அல்லிமுத்து உடனிருந்தனர்.