பைக் மீது கண்டெய்னர் மோதல் மனைவி கண் எதிரே கணவர் பலி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 டிச
2021
02:32

விழுப்புரம் : பைக் மீது கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் மனைவி கண் எதிரில் கணவர் பரிதாபமாக இறந்தார்.கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த ஒறையூரை சேர்ந்தவர் பாலமுருகன், 37; டிரைவர். இவர்,



9 மாத கர்ப்பிணியான தனது மனைவி ஆஷாவை, 25, மருத்துவ பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் அழைத்து வந்தார்.அங்கு பரிசோதனை முடிந்து, மனைவியுடன் பைக்கில் வீட்டிற்கு நேற்று திரும்பி கொண்டிருந்தார். விழுப்புரம் ஜானகிபுரம் ரவுண்டானா அருகே காலை 11:45 மணிக்கு வந்தபோது பின்னால் வந்த கண்டெய்னர் லாரி, பைக் மீது மோதியது.



இதில், பாலமுருகன் சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயமடைந்த ஆஷாவை அருகிலிருந்தவர்கள் மீட்டு, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர்.விபத்து ஏற்படுத்திய கண்டெய்னர் லாரி டிரைவர், நிறுத்தாமல் சென்றார். தகவலறிந்த விழுப்புரம் தாலுகா போலீசார் மற்றும் பாலமுருகனின் உறவினர்கள் அரசூரில் லாரியை மடக்கி பிடித்தனர்.



லாரி டிரைவர் ராமநாதபுரம் மாவட்டம், புத்தேந்தரை சேர்ந்த குமரேசன், 41; என்பவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில், குமரேசன் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது.விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து குமரேசனை கைது செய்து, லாரியை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X