வெட்டப்பட்ட 171 மரங்கள் : நடவடிக்கையில் சுணக்கம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 டிச
2021
02:57

பந்தலுார்;பந்தலுார் அருகே அய்யன்கொல்லி பகுதியில், அனுமதியின்றி, 171 வெட்டப்பட்டும், நடவடிக்கையில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.பந்தலுார் அருகே, அய்யன் கொல்லி; சன்னக்கொல்லி பகுதியில் முதுமலையில் குடியிருந்தவர்களுக்கு மாற்றிட திட்டத்தின் கீழ், நிலம் ஒதுக்கி தரப்பட்டது. இந்நிலையில், வாசு என்பவருக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில், அயனிபலா , வெண்தேக்கு உள்ளிட்ட பல வகையான பட்டியல் மரங்கள், வனத்துறை அனுமதி பெறாமல், மர வியாபாரி ஒருவர் மூலம் வெட்டப்பட்டுள்ளன. இதுவரை, 171 மரங்களை அடியோடு வெட்டப்பட்டும், வனத்துறையினர் கண்டுகொள்ளாமல் விட்டுள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.இங்கு ஏற்கனவே வெட்டப்பட்ட மரங்கள், கேரளாவுக்கு கடத்தப்பட்டதுடன், உள்ளூர் தேயிலை தொழிற்சாலைக்கு விற்பனை செய்யப்பட்டு உள்ளன. இப்பகுதியில், கூடலுார் வன அலுவலர் கொம்மு ஓம்காரம் தலைமையிலான வனத்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் நேரடி விசாரணை மேற்கொண்டனர்.சம்பந்தப்பட்ட இடம் மாற்று குடியமர்வு திட்ட கமிட்டி வசம் ஒப்படைக்கப்பட்டு உள்ள நிலையில், மாவட்ட கலெக்டரின் உத்தரவின் கீழ் நடவடிக்கை எடுக்க இயலும் என்பதால், இதன் விபரங்கள் கலெக்டருக்கு அனுப்பப்பட்டுள்ளது. நடவடிக்கையில், வேகம் குறைந்தால், அங்கு வெட்டி வைக்கப்பட்டுள்ள மரங்கள், கடத்தப்படும் அபாயம் உள்ளது.கூடலுார் வன அலுவலர் கொம்மு ஓம்காரம் கூறுகையில்,'' முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வாசு என்பவர் தலைமறைவாகி உள்ளார். மரம் வெட்டியது தொடர்பாக, கலெக்டர் உத்தரவுக்கு பின் நடவடிக்கை எடுக்கப்படும். பொக்லைன் பயன்படுத்தபட்டதற்கு வருவாய் துறையினர் நடவடிக்கை எடுப்பர்,'' என்றார்.

 

Advertisement
மேலும் நீலகிரி மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X