கூடலுார்:முதுமலை வெளிவட்டம் பகுதியில், ஆறு நாட்கள் நடக்கும், வன விலங்குகள் கணக்கெடுப்பு பணி நேற்று துவங்கியது.முதுமலை உள்வட்டம் பகுதியில், பருவமழைக்கு பிந்தையவன விலங்கு கணக்கெடுப்பு பணிகள், 25ல் துவங்கி 30ம் தேதி நிறைவு பெற்றது. தொடர்ந்து, முதுமலை வெளிவட்டம் பகுதிக்கு உட்பட்ட சீகூர், சிங்கார, நீலகிரி கிழக்கு சரிவு வனச்சரக வனப்பகுதிகளில், வன விலங்கு கணக்கெடுப்பு பணிகள் நேற்று துவங்கியது. இதற்காக வனப்பகுதி, 34 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, பிரிவுக்கு தலா நான்கு வன ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இப்பணிகள், 10ம் தேதி நிறைவு பெறுகிறது.வனத்துறையினர் கூறுகையில், 'வனவிலங்கு கணக்கெடுப்பு பணியின் போது நேரடியாக தென்படும் வன விலங்குகள், கால்தடம், எச்சம் குறித்த விபரங்கள் 'டேட்டா சீட்', மொபைல் செயலியில் பதிவு செய்யப்படுகிறது. அதனடிப்படையில் வனவிலங்குகள் எண்ணிக்கை குறித்து கணக்கிடப்படும்,' என்றனர்.