ஊட்டி:ஊட்டி, காபிஹவுஸ் சந்திப்பில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின், 5 ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் வினோத் தலைமை வகித்தார். துணை செயலாளர் கோபாலகிருஷ்ணன் முன்னிலையில், கட்சியினர் ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தினர். இதேபோல, குன்னுார், கோத்தகிரி, கூடலுார், பந்தலுார் பகுதிகளில், அந்தந்த ஒன்றியங்களில் கட்சி நிர்வாகிகள் சார்பில், நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.