தடுப்பணையுில் மணல் மூட்டைகளால் தடுப்பு | காஞ்சிபுரம் செய்திகள் | Dinamalar
தடுப்பணையுில் மணல் மூட்டைகளால் தடுப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

06 டிச
2021
04:34

மாமல்லபுரம், : பாலாற்று தடுப்பணை கரையில் ஏற்பட்ட மண் அரிப்பை தடுக்க, மணல் மூட்டைகளால் தடுப்பு அமைக்கப்பட்டு உள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அருகில், கடலுார் - வாயலுார் பாலாற்றுப் படுகையில், நீர் செறிவூட்டல் தடுப்பணை, அணுசக்தி துறை நிதி, 32.5 கோடி ரூபாய் மதிப்பில், 2019ல் அமைக்கப்பட்டது.மூன்றாண்டுகளாக, மழையின்போது 1 டி.எம்.சி., நீர் தேங்குகிறது. அணை பாதுகாப்பு கருதி, இருபுற கரையில், கான்கிரீட் தடுப்பு அமைக்கப்பட்டு உள்ளது.கடந்த ஆண்டு மழையில், கான்கிரீட் தடுப்பு பகுதியில், மண் அரித்து, கரை உடையும் நிலை ஏற்பட்டதால், கற்கள் குவித்து பலப்படுத்ததப்பட்டது. குறுகிய பகுதிக்கே தடுப்பு உள்ளது.தற்போது வெள்ளம் பெருக்கெடுக்கும் நிலையில், தடுப்பிற்கு அப்பால் உள்ள பகுதியில், கரை அரிக்கப்பட்டு, கான்கிரீட் உடையும் நிலை ஏற்பட்டது. இப்பாதிப்பை தவிர்க்க, பொதுப்பணித் துறையினர், மணல் மூட்டைகள் அடுக்கி பலப்படுத்தினர்.

 

Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X