பெருங்குடி : மதுரை பெருங்குடி சரஸ்வதி நாராயணன் கல்லுாரி என்.எஸ்.எஸ்., திட்டம், வலையங்குளம் அரசு ஆரம்ப சுகாதாரநிலையம் சார்பில் கொரோனா தடுப்பூசி இலவச முகாம் நடந்தது.முதல்வர் கண்ணன் துவக்கி வைத்தார். வட்டார மருத்துவ அலுவலர் சிவக்குமார், மேற்பார்வையாளர் தங்கசாமி, ஆய்வாளர் ஜெயக்குமார், செவிலியர்கள் உள்ளிட்டோர் 117 பேருக்கு முதல், 266 பேருக்கு 2வது தவணை தடுப்பூசி செலுத்தினர். என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர்கள்விஜயகுமார், ராமகிருஷ்ணன், இருளப்பன் ஏற்பாடுகளை செய்தனர்.