ஆக்கிரமிப்பில் மாநகராட்சி தெருக்கள், நீர் வழித்தடங்கள் ; தேங்கும் மழைநீரை அகற்ற அதிகாரிகள் முன்வருவார்களா | மதுரை செய்திகள் | Dinamalar
ஆக்கிரமிப்பில் மாநகராட்சி தெருக்கள், நீர் வழித்தடங்கள் ; தேங்கும் மழைநீரை அகற்ற அதிகாரிகள் முன்வருவார்களா
Advertisement
 

பதிவு செய்த நாள்

06 டிச
2021
05:42

மதுரை : மதுரை மாநகராட்சி விரிவாக்கம் கூடல்நகர், ஆனையூர், திருப்பாலை, தபால்தந்தி நகர், அய்யர்பங்களா உள்ளிட்ட பகுதிகளில் தெருக்கள், முட்டு சந்துகள், மழைநீர் வடிகால்கள், ரோடுகள், நீர்வழித்தடங்கள் பாரபட்சமின்றி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. மழைநீர் வெளியேற வழியின்றி குளமாக தேங்கியுள்ளதால்மக்கள் அவதிக்குஉள்ளாகின்றனர்.



விரிவாக்க பகுதிகளில் தற்போது பாதாள சாக்கடை பணி நடக்கிறது. இதற்காக ரோடுகள் ஆங்காங்கு தோண்டப்பட்டு பள்ளங்களாக உள்ளன. இந்நிலையில் தொடர்ந்து மழை வெளுத்து வாங்கியதால் தெருக்கள் குளமாக மாறியுள்ளன. சில தெருக்களில் கழிவுநீர் கால்வாய் ரோட்டோரம் இருக்கிறது. அதன்மீது சிமென்ட் சிலாப், பெரிய கற்களை போட்டு தளம் அமைத்து இருப்பதால் நீர் வெளியேற வழியில்லை. இதனால் திருப்பாலை உள்ளிட்ட சில பகுதிகளில் மாநகராட்சி அதிகாரிகள் கால்வாய் பக்கவாட்டில் துளையிட்டு நீரை வெளியேற்றி வருகின்றனர்.தெருக்களில் நீர் வழித்தடம் தவிர முட்டு சந்துகளில் கடைசியில் வீடு கட்டியுள்ளவர்கள் தெருக்களின் குறுக்கே தளம், மேற்கூரை, காம்பவுண்ட் சுவர், கேட் அமைத்து ஆக்கிரமித்து கட்டடம் கட்டி பயன்படுத்துகின்றனர்.

பாதாள சாக்கடைக்கு மேன்ஹோல் அமைக்கும் இடம் 'மார்க்' செய்யப்பட்டால் கூட அதற்கும் முட்டு சந்து ஆக்கிரமிப்பாளர்கள் அனுமதியளிப்பதில்லை.இதனால் திட்டமிட்டபடி பாதாள சாக்கடை அமைப்பதில் சிக்கல் நிலவுகிறது. பல சதுரடிகளை இலவசமாக இழுத்து முட்டு சந்து ரோட்டில் கட்டடம் கட்டியவர்கள் மீதும், நீர் வழித்தடங்களை ஆக்கிரமித்தவர்கள் மீதும் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காதது வியப்புஅளிக்கிறது. இத்தகைய ஆக்கிரமிப்புகளை அகற்றி மழைநீரை வெளியேற்ற மாநகராட்சி கமிஷனர்கார்த்திகேயன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X