நகராட்சிக்கு ஒதுக்கிய நூற்றாண்டு நிதி வீண் .. .பாதாள சாக்கடையால் பஞ்சரான சாலைகள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 டிச
2021
06:02

விழுப்புரம் : விழுப்புரம் நகராட்சியில் பாதாள சாக்கடைப்பணிக்காக பள்ளம் தோண்டி சாலைகளை சேதப்படுத்தியதால், நுாற்றாண்டு விழா சிறப்பு நிதி வீணாகியுள்ளது.



நுாற்றாண்டு விழா கண்ட, விழுப்புரம் நகராட்சியில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள கடந்த 2019ம் ஆண்டு முன்னாள் முதல்வர் பழனிசாமி ரூ.50 கோடி நிதி ஒதுக்கினார். இந்த நிதியில், விழுப்புரம் நகராட்சியில் 59.706 கி.மீ., துார சாலைக்கு 33 கோடியே 22 லட்சத்து 50 ஆயிரம்



ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.இதில், 151 இடங்களில், 32.949 கி.மீ., மண் சாலைகளை தார் சாலைகளாக அமைக்கும் பணிகளும், 9 இடங்களில் 1.456 கி.மீ., சிமென்ட் சாலை பணி, 128 இடங்களில் பழுதடைந்த தார் சாலைகள் 25.296 கி.மீ., சீரமைப்பு என பணிகள்



மேற்கொள்ளப்பட்டது.மேலும், 6,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் விநியோக வாகனம் வாங்குவதற்கு 26 லட்சத்து 50 ஆயிரம், 2,500 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் விநியோக வாகனம் 2 வாங்க 26 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.தெருவிளக்கு பராமரிப்பு செய்யும் வாகனம் ஒன்றிற்கு 38 லட்சம், உயர்கோபுர மின்விளக்கு நான்கு வாங்குவதற்கு 34 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது.எல்.இ.டி., மின்விளக்கு பிரதான சாலைக்கு 80 வாட்ஸ் கொண்ட 660 விளக்குகள் வாங்க 86 லட்சத்து 50 ஆயிரம், 60 சென்டர் மீடியன் வைப்பதற்கு 80 லட்சம், 48 வாட்ஸ் கொண்ட 497 எல்.இ.டி., மின் விளக்குகள் வாங்குவதற்கு 39 லட்சம் ரூபாயில் பணிகள் மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.பாதாள சாக்கடை ஆள்நுழைவு தொட்டி மற்றும் கழிவுநீர் குழாய் பதிக்கும் பணிகளுக்கு ஒரு கோடியே 60 லட்சத்து 50 ஆயிரம், புதிய அலுவலக கட்டடம் கட்டும் பணிக்கு 4 கோடியே 65 லட்சம், பழைய பஸ் நிலைய மேம்பாடு செய்யும் பணிகளுக்கு ஒரு கோடியே 21 லட்சம், பூந்தோட்டம் குளம்



சீரமைப்பு பணிகளுக்கு ஒரு கோடியே 50 லட்சம் ரூபாயும் ஒதுக்கப்பட்டது.இதையடுத்து, நகரில் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகள் மற்றும் விடுபட்ட பகுதிகளில் புதிய தார், சிமெண்ட் சாலைகள், பழுதடைந்த சாலைகள் சீரமைக்கப்பட்டது. இதன் பின், பாதாள சாக்கடை பணிகள் துவங்கப்பட்டது. இதனால், புதியதாக அமைக்கப்பட்ட தார், சிமெண்ட்




சாலைகளை உடைத்து பாதாள சாக்கடை பணிகள் மேற்கொள்ளப்பட்டது.இப்பணியால் நகராட்சியில் உள்ள பல்வேறு நகரில் சாலைகள் கந்தலாக காணப்படுகின்றது. இதனால், பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மேலும், அதிகாரிகளின் சரியான திட்டமிடல் இல்லாமல் மேற்கொள்ளப்பட்ட இப்பணியால், நுாற்றாண்டு நிதி




வீணாகியுள்ளது.மேலும், சேதமடைந்த சாலைகளை சீரமைக்க, நகராட்சி சார்பில் புதியதாக நிதி ஒதுக்க வேண்டும். இதனால், அரசு நிதி வீணாகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X