வடமதுரை : அய்யலூர் ஆர்.வி.எஸ்., குமரன் கலை அறிவியல் கல்லூரியில் 'பாலின உணர்திறன்' எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. கல்விக் குழும தனி அலுவலர் உமாபிரியன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். மதுரை சோக்கோ அறக்கட்டளை இணை இயக்குநர் செல்வகோமதி, முதல்வர் திருமாறன் ஆகியோர் பாலின வேறுபாடு, உணர்வுகள், கட்டுப்பாடுடன் இருந்து பாதுகாப்புடன் வாழும் சூழலை தக்க வைக்க பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து பேசினர்.